Sunday, December 06, 2009

SINTHANAIGAL


சிந்தனைகள்


உண்மை சுடும் என்பது நிதர்சனம். யாராக இருந்தாலும், நம்முடைய அகந்தை சற்றே அசைவுற்றாலும், நம்மால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. முன்னால் கூறிய அனைத்து தவறுகளுக்கும் நாம் அனைவரும் பெறும் பங்கு வகிக்கின்றோம். எவ்வாறு?



சற்றே நம் வரலாற்றை மொகலாய, ஆங்கிலேய காலங்களுக்கு முன்னால் கற்பனை செய்து பார்தால், நாம் அனைவரும் கற்கால, பிற்க்கால சேர, சோழ, பாண்டிய, பல்லவ, மற்றும் பல மன்னர்களால் ஆளப்பட்டு, தொழில்,மொழி அடிப்படையில் பிரிந்து, பிற்க்காலத்தில் சாதிகளாக மாறி பிரிந்து வாழ்ந்து வந்தோம். மொகலாய, ஆங்கிலேய காலங்களின் பின் சாதிகளுடன், மத அடிப்படையில் பிரிந்து, இன்னாள் வரையில், சாதி, மத வேறுபாட்டிற்க்கு ஒரு குறையுமில்லாமல், வட இந்தியா, தென்னிந்தியா, இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவம், என சில சொற்ப எண்ணிக்கை கையாலாகாத காரணங்களினால் பிரிந்து, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.



இன்று நம் நாட்டில், ஏறத்தாழ, 200க்கும் அதிக மொழிகள் பேசப்படுகின்றன. அதற்கும் மேற்பட்ட சாதிகளும், ப்ரத்யேக சங்கங்களும் நம் நாட்டில் உள்ளன. இவையெல்லாம் போதாதென்று, கார்ப்ரேட் மாஃபியாகளும், நம் அரசியல் தானைத் தலைவர்கள் பலரும், இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இத்துடன் எல்லாவற்றிற்கும் குறுக்கு வழியில் யோசிக்கும் நம் ஒவ்வொருவரின் மனமும் இணைந்து, நம் நாட்டை இன்று வரை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கின்றன.



யோசித்துப் பாருங்கள்.....



நம் நாட்டில் எத்தனை மதக் கலவரங்கள் நடக்கின்றன....?



எத்தனை குண்டு வெடிப்புகள்...? எத்தனை மரணங்கள்...?



எத்தனை அழு குரல்கள்....? எத்தனை ஓலங்கள்...?



எத்தனை சிபிஐ ரெய்டுகள்...? எத்தனை பிடி வாரண்டுகள்...?



எத்தனை (பொய்)சாட்சியங்கள்...?எத்தனை பண பரிமாற்றங்கள்...?



எத்தனை தீர்ப்புகள் திருத்தப்படுகின்றன....?



இப்படி எவ்வளவு எத்தனை-கள்...?



எத்தனை காலம்தான் இனி ஏமாற்றுவார் நம் நாட்டிலே...?



காலம் பதில் சொல்லுமா...?



நம் கையில் என்னவுள்ளது..?





உண்மை இன்னும் சுடும்...!

1 comments: